டெல்டாவை விட ஒமிக்ரானின் மாறுபாடு வீரியம் குறைந்தது போன்று தோன்றினாலும் அதனை லேசாக எடுத்து கொள்ள கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனுடன் ஒத்து போகும் வகையில் இங்கிலாந்து நிபுணரின் எச்சரிக்கையும் அமைந்துள்ளது.
இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ரவீந்திர குப்தா, கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
இவர் ஒமிக்ரான் மாறுபாடு தொடர்பில் சமீபத்தில் ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், அதிகளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சூழலிலும், கொரோனா மிகவும் திறமையாக பரவி வருகிறது. அதனால், அது லேசாக உள்ளது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
அதனாலேயே, இதனை ஒரு பரிணாம பிழை என நான் நினைக்கிறேன். இதற்கு அடுத்து வரும் கொரோனா மாறுபாடு மிக கடுமையாக இருக்கும் என்று அடையாளப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வரும் புதிய வகை, ஒமிக்ரானின் பண்புகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், இதற்கு முன்பு நாம் கண்ட கடுமையான நிலைக்கு நாம் திரும்பவும் கூடும் என்று கூறியுள்ள அவர், தடுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியம் வாய்ந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில் கொரோனாவுக்கு எதிராக, முதலில் இருக்கும் பாதுகாப்பு அரணாக அது தொடர்ந்து இருந்துவருகிறது.
ஒமிக்ரானின் பாதிப்புகள் கடுமை குறைவாக இருப்பது என்பது தற்போது நல்ல விடயம். ஏனென்றால், தொற்றை தடுப்பது என்பது செய்ய வேண்டியவற்றில் விரும்பத்தக்க ஒன்று.
அதனால், லேசான பாதிப்பு ஏற்படுத்தும் வகையான ஒமிக்ரான் இருக்கும் சூழலில், இதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.