இது குறித்து பைசர் நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி ஆல்பர்ட் போர்லா,கருத்துத் தெரிவிக்கையில் ‘புதிதாகக் தயாரிக்கப்படும் தடுப்பூசி செயலாற்றும் வேகம், திறன் ஆகியவை குறித்த தகவல்கள் இனிமேல் தான் தெரியவரும்’ என்றார்.
அத்துடன் ‘தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளே ஒமைக்ரோனுக்கு எதிராக நியாயமான பாதுகாப்பை கொடுத்தாலும், ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பிரத்யேக தடுப்பூசி தயாராகி வருவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஒமைக்ரோனுக்கு மட்டுமில்லாமல் புதிதாக உருமாறும் வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசியை தயாரித்து வருவதாக மொடர்னா நிறுவனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.