ஒருங்கிணைப்பு தலைவரானார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து  நியமனத்தை பெற்றுக் கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் “கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையை “மாற்றான் தாய் மனப்பான்மையோடு”  மேற்கொண்டனர்.  எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்து, அவற்றை பின் தொடர்ந்து நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொள்வதோடு சகல மக்களுக்கும் இன, மத ,மொழி ,பிரதேச வாதங்கள் கடந்து மேற்கொள்வேன்”  என்றார்.

சுந்தரலிங்கம் பிரதீப், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply