இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.