’ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ பிரேரணை தாக்கல் ஒத்திவைப்பு

பாராளு​மன்​றத்​தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ பிரேரணை தாக்கல் செய்​யப்​படுவதை மத்திய அரசு தள்ளி​வைத்​துள்ளது. பாராளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர், கடந்த 4ஆம் திகதி தொடங்கி, வரும் 20ஆம் திகதி வரை நடைபெறும். கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்​பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் அமளியில் ஈடுபட்டன.