இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரேரணைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த 12ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் இந்த பிரேரணை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஒரேநாடு, ஒரே தேர்தல் பிரேரணை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், திங்கட்கிழமை (16) தாக்கல் செய்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற நடைமுறைப்படி, எம்.பி.க்களுக்கு இந்த பிரேரணைகளின் நகல் கடந்த வாரம் வழங்கப்பட்டன. இந்த நிலையில், பாராளுமன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘துணை மானிய கோரிக்கைகள் குறித்து மக்களவையில், டிசெம்பர 16ஆம் திகதி விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பிரேரணைகள் மக்களவையில் திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மாறாக இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களவையின் மாற்றியமைக்கப்பட்ட அலுவல் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டு இருந்தது. இதில் இன்றைக்கான அலுவல்களில் மேற்படி பிரேரணைகள் இடம்பெறவில்லை.
பிரேரணை தாக்கல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.