குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.