இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார்.
இதேவேளை, தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறும் ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.