அங்கு தொடர்ந்துரைத்த அவர், கௌதாரிமுனை கடல்ட்டை பண்ணையைத் தடுத்து நிறுத்தும் முகமாக தங்களது சுயலாப அரசியலுக்காக சில கருத்துகளை சிலர் சொல்லி வருகின்றனரென்றார்.
‘கடந்த ஆட்சியில் இலங்கை – சீனா கூட்டுறவாக அரியாலையில் அனுமதி பெற்று 4, 5 பரப்பில் தனியார் ஒருவருடைய காணியை குத்தகைக்கு பெற்று, கடல் அட்டை இனப்பெருக்க நிலையமொன்று உருவாக்கப்பட்டது.
‘அதன் பின்னர், அரியாலை பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை பெற்று, இனப்பெருக்கம் செய்யப்பட்ட கடலட்டை குஞ்சுகளை வளர்த்தெடுப்பதற்காக ஒரு நேசரி ஒன்று செய்திருக்கிறார்கள். குறித்த செயற்பாடு சரியாக அமையாத காரணத்தால், கௌதாரிமுனையில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து ஒரு பரீட்சார்த்தமாக கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணை அமைத்துள்ளது’ எனத் தெரிவித்தார்.