கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 11 இலங்கையர்களும் 35 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அரசாங்க ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள். என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
துபாய்க்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-225 ஏறுவதற்காக அவர்கள் திங்கட்கிழமை (24) மாலை 6.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து கனடாவின் டொராண்டோ செல்ல திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.