மேலும், தாமஸ் கோட்டூருக்கு ரூ.6.50 இலட்சம் அபராதமும், செபிக்கு ஐந்து இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் சாட்சியங்களை மறைத்த குற்றத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.
ஒரு பாதிரியாரும், கன்னியாஸ்திரீயையும் இணைந்து, மற்றொரு கன்னியாஸ்திரீயை கொலை செய்திருப்பது மிகவும் அரிய வழக்கு என்பதால், குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதம் முன் வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரீயும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.