கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்

உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’எற்படுத்தப்பட்டது. தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரேன். உலகின் பல நாடுகள் உக்ரேனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷிய-உக்ரேன் போரில் உக்ரேனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.