இதுவரை கரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 281 பேர் குணமடைந்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அங்கு அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு நிலவுகிறது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.