கல்வி அமைச்சின் அறிவிப்பு

அதனடிப்படையில், வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம், மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பாடசாலைகளை திங்கட்கிழமை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் கடுவெல மற்றும் கம்பஹா மாவட்டத்தில் களனி மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (14) மூடப்படும்

Leave a Reply