இராஜினாமா முடிவைக் கைவிடுமாறு, 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர், ராகுல் காந்தியைச் சந்தித்து வலியுறுத்தியும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
இதற்கிடையில், இராஜினாமா முடிவை, ராகுல் காந்தி கைவிட வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகே, சில நாள்களாக, அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தனது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில், ராகுல் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இராஜினாமா ஏற்கப்பட்டால், தலைவர் பதவியில் அவரது தங்கை பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான நட்வர் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே, “காந்தி குடும்பத்தில் இருந்து வராத யாராவது ஒருவர்கூட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆகலாம்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என்றும் இந்த முடிவில் இருந்து, அவரது குடும்பம் தற்போது பின்வாங்க வேண்டி இருக்கும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.