நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் இராணுவம், காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளை குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதோடு அல்-குத்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியேறவேண்டும் என அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கூறப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளதால், அவர்களை நகர்த்தக் கூட முடியாது சூழல் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் அந்தப் பகுதியில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது என பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.