பொத்துவில்காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தரும் இந்த காட்டு யானைகள்கூட்டத்திலிருந்து பாதுகாக்க அறுவடை காலங்களில் இரவு வேளைகளில் வயல்நிலங்களுக்கு உட்புகுந்து விளைந்த வயல் நிலத்தை துவம்சம் செய்ததால் தமதுஇவ்வருடத்தின் வாழ்வாதாரத் தொழில் இன்னும் பாரிய நட்டத்தை ஏற்படுத்திக் இருப்பதாகவும், நெற்பயிரை இரவு வேளையில் யானைகளின் அழிவுகளிலிருந்து தாம் பாதுகாத்தாலும் அறுவடை ஆரம்பத்தில் இக் காட்டு யானைகள் கூட்டம் வருகை தந்ததால்கடந்த பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் சில வயற் கண்டங்களில் அறுவடை மேற்கொள்ளவில்லை
வெள்ளத்தில் அள்ளுண்டு போனதில் எஞ்சியுள்ள நெற்பயிரை இரவு பகலாக கண் விழித்திருந்து அறுவடை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவடை முடிந்த பின்னும் தமது கிராமங்களுக்குள் இக்காட்டுயானைகள் உட்புகாமல் இருப்பதற்கு தொடர்ந்து தாம் காவல் செய்வதாகவும், சிறுபோக வேளாண்மை பயிர்ச்செய்கை குரிய காலம் ஆரம்பித்தாலும் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் வயல் வெளிகளில் தொடர்ந்த தரித்து பட்டியாக நிற்பதனால் தாம் சிறு போகம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என அப்பகுதி விவசாயிகள்அச்சம் வெளியிடுகின்றனர்.
மிக நீண்டகாலமாகவிருந்துகாட்டுயானைகளின்தொல்லைகளும்,அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன்,யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமல் இருப்பதற்கு யானை பாதுகாப்பு வேலிகளைஅமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இதுவரையில் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வ.சக்தி