அந்த கப்பலில் பயணித்த 6 கடற்படையினரும் வைத்திய பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தேகாரோக்கியத்துடன் இருப்பதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்பு துண்டிக்கப்பட்ட கப்பலிலிருந்த கடற்படையினர், செயலிழந்த கப்பலின் இயந்திரத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் பல நாட்களாக பெரும் முயற்சி செய்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் 430 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு கப்பல் சென்றுள்ளதாகவும் இதன்போது சர்வதேச கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் ஒன்று இந்தக் கப்பலைக் கடந்து சென்றதாகவும், அக்கப்பலிடம் உதவி கோரி பணியாளர்கள் கூச்சலிட்ட போதிலும், அந்த கப்பலில் சென்றவர்கள் இதனை அவதானிக்கவில்லை என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த கப்பலில் இருந்த கடற்படையினரின் பெரும் முயற்சியில் கப்பலின் இயந்திரம் இந்த மாதம் 9ஆம் திகதி இயங்கத் தொடங்கியதாகவும் இதனையடுத்தே அவர்கள் பானம கடற்படை முகாமுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்