சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருக்கும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.