அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.
காணாமற்போன ஏனையோரை மீட்டெடுக்கும் பணிகளில், கடற்படையின் சிறப்புப் படயணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி உள்ளிட்ட சில சிறப்பு அணிகளும், சுழியோடிகளைச் சேர்ந்த எட்டு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்த பலர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவத்தில், சப்ரியா (30 வயது) என்ற முன்பள்ளி ஆசிரியரும் அவரது முன்பள்ளியில் பயிலும் மகனான சேகுசகி (3 வயது) அடங்குகின்றனர். பாத்திமா சகிலா (6 வயது), பரீஸ் பஹி (6 வயது), பாத்திமா சிரின் (8 வயது) ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு சேகு அப்துல் காதர் (70 வயது) என்ற வயோதிபரும் உயிரிழந்துள்ளார்.