கியூபாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

கியூபாவில், இன்று (10), அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் 5.9 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதைதொடர்ந்து, அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவானது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், மக்கள் பீதி அடைந்தனர்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.