கியூபா மக்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

உலகத்தில் மருத்துவத்தில் சிறந்த நாடான கியூபா – ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்களை தன் கல்லூரிகளில் படிக்க வைத்து மருத்துவர்களாக்கி அனுப்பும் சேவை மகத்தானது.

இந்தியாவோ நாமோ – பாலஸ்தீன மக்களைக் கொல்ல ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும் டிமோஜி அரசாஙகத்தை சகித்துக் கொண்டிருக்கிறோம்.

வேதனை!அணிசேரா நாடுகள் அமைத்துத் தலைமை தாங்கிய இந்திய நாட்டின் சீரழிவுத் துயரம்‌ இது! வெட்கப்பட வேண்டும்!கொரோனா காலத்தில் அமெரிக்காவுக்கும் டாக்டர்களை அனுப்பி வைத்து வைத்தியம் பார்த்த பெருந்தன்மை கொண்ட கியூபா – அமெரிக்கப்‌பொருளாதாரத் தடையால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது என்பது கொடுஞ்செய்தி.

கடந்த மூன்று நாள்களாக மின்சாரம் இல்லை ! கியூப மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.வஞ்சச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா!

Leave a Reply