இராணுவ முகாமுக்கு வாருங்கள் உணவருந்திச் செல்வோம் – ஜனாதிபதி மைத்திரி
இராணுவத்தை வெளியேறக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் – முதல்வர் விக்னேஸ்வரன்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் அங்குள்ள படை முகாம் ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு உணவருந்தச் சென்ற ஜனாதிபதி வடக்கு முதல்வரையும் உணவருந்த அழைத்தார். வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் என்று கேட்டார் வடக்கு முதல்வர். அதற்கு பதலளிக்காத ஜனாதிபதி புன்முறுவலுடன் விடை பெற்றார்.
ஆனால் இந்த விழாவை ஒழுங்கமைத்ததே இராணுவம்தானே. விழா நடைபெற்ற என்னுடை கிராமம் 24 மணிநேரத்துக்கு முன்பிருந்தே அதிஉச்ச பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. மகிந்தவின் விழாவுக்கும் இதற்கும் வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை. டிப்போ ரோட் , வில்சன் ரோட் முழுமையாக போக்குவரத்து தடுக்கப்பட்டு VIPகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். என்னுடைட வீடு உள்ள எமர்சன் ரோட் மாத்திரம் இராணுவ கண்காணிப்பின் கீழ் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘”சதோச “கடையை சிம்பிளாக வந்து திறந்து வைத்துவிட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்ற மைத்திரி வருகிறாரா? அல்லது மகிந்த தான் வருகிறாரா என்ற குழப்பமே இங்கே கிளிநொச்சியில் பலருக்கும் வந்துவிட்டது.
பின்பு ஏன் முதல்வர் ஐயா சாப்பாட்டில் மட்டும் அரசியல் காட்டுறார்.
ஒருவேளை அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இந்தாள் ஒவரா பார்த்திருப்பாரோ?
(பி.கு: பத்து வருடங்களுக்கு முன்பு 2004-2005 களில் பிரபாகரன் வெளிநாட்டு ராஜததந்திரிகளை சந்திக்கவரும்போதும் இப்படிதான் புலிகளும் எனது கிராமத்தில் குவிக்கப்படுவார்கள்)
(Rajh Selvapathi)