உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாரிய நீர்
வழங்கல் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த 28.03.2025 இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.