கிளிநொச்சியில் நீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி

கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில்
இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா,இளங்குமரன், ரஜீவன், ஆகியோருடன் கிளிநொச்சி அரச அதிபர் முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர். எஸ். சாரங்கன் வட்டக்கச்சி நீர் வழங்கல் திட்டம், கண்டாவளை கிராமிய நீர் வழங்கல் திட்டம், இரணைமாதாநகர் கிராமிய நீர் வழங்கல் திட்டம், மற்றும் பாரிய கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் போன்ற திட்டங்களுக்கான அனுமதிக்கு யோசனை சமர்ப்பித்திருந்தார். இதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதற்கான அனுமதி  வழங்கியுள்ளது.

கிளிநொச்சி நகரத்தின் விரைவான நகரமயமாக்கல், முன்மொழியப்பட்ட பரந்தன் கைத்தொழில் வலயம் மற்றும் அறிவியல் நகர் கைத்தொழில் வலயம் ( பல்கலைக்கழகம் மற்றும் ஆடை தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள்)  உட்பட அபிவிருத்தி அடைந்து வரும்  கைத்தொழில் துறையினையும் கருத்தில் கொண்டு அதற்கான உட்கட்டுமான வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்ற வகையில் பாரிய கிளிநொச்சி  நீர் வழங்கல் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றம் முக்கியமாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் என்பனவற்றுக்கு கைத்தொழில் வலயங்களின் அவசியம் கருதி தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதனை  ஊக்குவிக்கும் பொருட்டு  அதற்கான நீர் மின்சாரம், போக்குவரத்து போன்ற  உட்கட்டுமான  வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை அடிப்படையாக கொண்டுள்ளதோடு, கண்டாவளை பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு 2 வீதமானவர்கள் சிறு நோயால் பாதிக்கப்பட்டுவதை கவனத்தில் எடுத்து மேற்படி நீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply