இன்றும் (23) இவ்வாறு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரை வலைகளுக்கு பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1,000 ரூபாய் முதல் 1,200 வரை விற்பனையாவதுடன், இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 4 முதல் 5 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.