மேற்படி கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
“இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையகப்படுத்தி, அதில் பல்கலைக்கழகக் கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தால் எந்த மறுப்பும் யாரும் சொல்வதற்கில்லை. ஆனால், கையகப்படுத்துகின்றோம் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக்கியிருப்பது மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.
“இந்த நாட்டில் போதுமான இடவசதிகளைக் கொண்ட பல இடங்கள் இருந்த போதிலும் கூட, கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன், இந்தக் கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்ற ஒரு சந்தேகம் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
“இதனை தடுப்பதற்காக, இந்தப்பிராந்தியத்திலுள்ள அனைத்துச் சமூகதத்தின தலைவர்களும் சிவில் சமூக அமைப்புகளும் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு கொரோனாவைக் கொண்டு சேர்ப்பிப்பதில் ஏன் அரசாங்கத்துக்கு இத்தனை ஆர்வம்? அதன்பேரில் மறைமுக நோக்கம் இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதில் நியாமிருப்பதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.