அம்பாறை மாவட்ட கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கே.எம்.கே.எஸ்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்மாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நெசவு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நெசவு நிலையமானது சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10க்கும் மேற்பட்ட யுவதிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சிகளை திறமையாக நிறைவு செய்வோறுக்கு தங்களின் வீடுகளில் நெசவு தொழிலை முன்னெடுப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.