அதன்படி, பிரித்தானியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அதேபோல வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவுகளின்படி, பிரித்தானியா மற்றும் வேல்ஸின் மக்கள் தொகையில் சுமார் 46.2 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது 59.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 46.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 4.9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 1.5 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக, மதச்சார்பற்றவர்கள் அங்கு அதிகம் இருக்கின்றனர் என்பதும் சமீபத்திய புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.