புத்தர் முக்தி அடைந்த அடைந்த இடத்தை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரிகர்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமையும். மேலும், உலகம் எங்கும் உள்ள புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம், உத்தரப் பிரதேசத்தின் 3வது மிகப்பெரியதாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் ஆனந்திபென், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஜோதிராதித்யா சிந்தியா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.