தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ள விஸ்மயாவின் மரணம் ஆரம்பத்தில் தற்கொலை எனக் கூறப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஸ்மயாவை அவரது கணவர்‘ கிரண் குமார்‘ வரதட்சணைக் கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
விஸ்மயா இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தனது உறவினர் ஒருவருக்குத் தான் துன்புறுத்தப்பட்டு காயமடைந்த புகைப் படங்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவரது பெற்றோர் தமது மகளின் மரணத்திற்குக் கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் எனக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இம் மரணமானது கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் 24 வயதான மற்றொரு இளம் பெண்ணும் வரதட்சணைக் கொடுமைக்குப் பலியாகியுள்ளார் .
இதனையடுத்து ”வரதட்சணை கொடுத்துத் தங்களின் பிள்ளைகளை வியாபாரப் பண்டங்களாக மாற்றும் போக்கைப் பெற்றோர் கைவிட வேண்டுமென” அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.