’கொதிக்கும்’ டெல்லி: 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவு

டெல்லி முன்கேஸ்பூர் பகுதியில் இந்த அளவுக்கு கடுமையான வெப்ப நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 49.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் டெல்லியில் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது இதற்கிடையே, இன்று நிலவிய இந்த கடுமையான வெப்ப நிலை காரணமாக டெல்லியில் மின் தேவையும் உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியின் மின் தேவை இன்று மட்டும் 8300 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இத்தனை மெகாவாட் மின்தேவை டெல்லியில் இதுவரை இருந்ததில்லை. இதுவே முதல்முறை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்