கொன்று பலாத்காரம்: தூங்கி எழுந்து துணி துவைத்த கொலையாளி

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார் அந்த பெண் டாக்டர். 2 நாட்களுக்கு முன்பு, அதே மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார். அன்றைய தினம் நைட் டியூட்டியில் இருந்தபோது, இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள்.

 மருத்துவமனையில் மாணவர்களுக்கென தனி ஓய்வுஅறை இல்லாததால் மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.  ஆனால், காலை நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் மற்ற மாணவர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியாமல் போனது. அதனால், சகமாணவர் ஒருவர் அவரைத்தேடி செமினார் ஹாலுக்கு சென்றபோதுதான், பிணமாக கிடக்கும் மாணவியை கண்டு அலறியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார் பெண் டாக்டர். அதற்கு பிறகே பொலிஸார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினார்கள். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கிடைத்த ப்ளூடூத் ஹெட்போனை வைத்து, சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சி: இவர் அந்த மருத்துவமனையில் வேலை செய்யவில்லை.. தன்னார்வல பணிக்காக அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வாராம்.  பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சஞ்சய் ராய் விடிகாலை 4 மணி அளவில் செமினார் ஹாலுக்குள் நுழைந்து, 40 நிமிடங்கள் கழித்தே செமினார் ஹாலை விட்டு வெளியே வந்துள்ளது பதிவாகியிருந்தது.

அந்த செமினார் ஹாலுக்குள் நுழையும்போது, காதில் ப்ளூடூத் ஹெட்போனை அணிந்தவாறே சென்றிருக்கிறார். ஆனால், வெளியே வரும்போது ப்ளூடூத் ஹெட்போன் அவரிடம் இல்லை. சம்பவ இடத்தில் கிடைத்த ஹெட்போனும், சஞ்சய் ராய் அணிந்திருந்த ஹெட்போனும் ஒன்றாக இருப்பதை கவனித்த பொலிஸார், இதை வைத்தே அவரை கைது செய்தனர்.

ப்ளு டூத்: இவ்வளவு கொடூரமாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்துவிட்டு, தன்னுடைய ரூமுக்கு சென்று நிம்மதியாக வெகுநேரம் தூங்கியிருக்கிறார். பிறகு காலையில் எழுந்து, தன்னுடைய டிரஸ்ஸில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் ரத்த கறைகளை போக்க, நன்றாக சோப்பு போட்டு துவைத்திருக்கிறார்.

பிறகு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டாராம். ஆனால், இவ்வளவும் செய்த சஞ்சய், ஒன்றே ஒன்றை கழுவ மறந்தமையால் மாட்டிக்கொண்டார். 

காயங்கள்: பெண் டாக்டரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், அவரது கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் உள்ளன.. கழுத்து எலும்பும் உடைந்துள்ளது.அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது’ என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே இன்னொரு பொலிஸ் அதிகாரி சொல்லும்போது, ‘பெண் டாக்டர் முதலில் கொலை செய்யப்பட்டு பிறகு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாய்ப்பையும் சூழ்நிலை சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன’ என்றார்.

ஆதாரம் இல்லை: கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் வேறு யாராவது குற்றத்தில் ஈடுபட்டார்களா? என்று தெரியவில்லை.. இதுகுறித்து இப்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் பொலிஸார்.

இதனிடையே, அவசர வார்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2 பாதுகாப்பு நபர்களை மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்யாததற்காக பணியில் இருந்து நீக்கியுள்ளனர். பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு, இதுவே வழிவகுத்துள்ளதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

 பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனிடையே, கொல்கத்தா ஹைகோர்ட்டில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது..

இவ்வழக்கு  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.எஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது

தேசிய மகளிர் ஆணையம்: இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தந்து வரும்நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த குழுவினர், சம்பந்தப்பட்ட ஆர்ஜி கார் அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

தன்னுடைய ஷூவில் இருந்த ரத்தத்தை கவனிக்காமல் விட்டுள்ளார். இதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர் அதன் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்து வௌியிட்டுள்ளன. 

அதேபோல, மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, டெல்லி உட்பட மத்திய மாநில அரசு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
நேற்றைய தினம் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்றும் போராட்டம் தொடர்கிறது. இதனால்பதற்றம் நீடித்து வருகிறது.