கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத்திட்டம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள மகிழங்காடு, நாட்டில் உள்ள அனைத்து விவசாய சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கி, விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தைப் பிரசாரம் செய்வதற்காக வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட முன்மாதிரியான கிராமமாகும்.

மகிழங்காட்டில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் – தனிப்பட்ட வங்கியியல் திரு திலக்ஷன் ஹெட்டியாராச்சி தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர், இதில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன், மத்திய வங்கியின் வடபிராந்திய பிராந்திய முகாமையாளர் திருமதி எஸ்.பஹீரதி மற்றும் கமநல சேவைகள் உதவி ஆணையாளர் பி. தேவதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, சிறந்த அறுவடைக்கான ஊக்க எழுச்சிகளை போற்றும் பாரம்பரிய சடங்குகள், நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நவீன அறுவடை நுட்பங்களின் செயல்விளக்கம், மற்றைய பகுதிகளுக்கு முன்மாதிரியாக இத்திட்டத்தை மேற்கொள்வதிலுள்ள முன்னேற்றம் மற்றும் திறன் குறித்து முக்கிய பங்குதாரர்களின் உரைகள், இத்திட்டம் எவ்வாறு விவசாயிகளின் நடைமுறைகள் மற்றும் வருமானங்களை சாதகமாக மாற்றியுள்ளது என்பதற்கான விவசாயிகளின் கருத்துரைகள் என்பன இடம்பெற்றதுடன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு அதன் சமூகப் பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக பன்முக வெட்டும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கொமர்ஷல் வங்கியின் பிரதிப்பொது முகாமையாளர் – தனிப்பட்ட வங்கியியல் திலக்ஷன் ஹெட்டியாராய்ச்சி —இலங்கையில் விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது நமது தேசத்தின் இதயத் துடிப்பாகும். புதுமை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம், நமது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், எதிர்கால தலைமுறைக்கு வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முடியும். கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டம் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதுடன், அடுத்த தலைமுறையினரை ஸ்மார்ட் விவசாய நடைமுறைகளைத் தழுவுவதற்குத் தூண்டும் என்பதும் கொமர்ஷல் வங்கியின் நம்பிக்கையாகும்.’ என்றார்.

Leave a Reply