தொடர்ந்து அகதிகள் என்ற சுமையினை சுமந்து செல்லும் இவர்களுக்கு தற்போது கொரோனாவின் சுமையும் சேர்ந்து மிகவும் கவலையில் ஆழ்த்தி உளளது.
அகதிகள் முகாம்களின் இருப்பிட முறையானது 10க்கு 10 என்ற அளவில் அமைக்கப்பட்டு தொடர் சங்கிலி போன்ற அமைப்பில் அனைத்து வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முகாமில் சுமார் 300 வீடுகள் என்றால் அனைத்துமே சங்கிலி தொடர் அமைப்பில்தான் இணைக்கப்பட்டுள்ளது.ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டாலும் அனைவருக்கும் பரவ கூடிய சூழலில்தான் அகதி மக்களின் நிலைபப்hடு உள்ளது.
தற்போது திருச்சி, மதுரை, தர்மபுரி.கோவை என இன்னும் பல அகதிகள் முகாம்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.
எனவே தமிழக மக்களின் நலன் கருதி ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் குறை தீர்க்க குழுக்களை அமைத்திருக்கும் தமிழக அரசுஅதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணிக்கும் அகதி மக்களின் நலன் கருதி அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவர மாவட்டம் வாரியாக அகதிகளுக்கென்று தனிக்குழு அமைத்து போர்கால அடிப்படையில் அகதிகளின்; நலன்காக்க வேண்டும் என்றும்
மேலும் மான்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு அகதி மக்களின் நிலைப்பாட்டினை மான்பிமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தமிழகத்தில் வாழும் இலங்கை அகதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.
பொதுநலன் கருதி
பாலா சமூக ஆர்வலர்
பரமத்தி.நாமக்கல் மாவட்டம்