ஓட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது குறைவடைந்துள்ளதாகவும் கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் அன்றாடம் பொருள் கொள்வனவுக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும்
இதன் காரணமாக, கண்டி-ஏ 9 வழியை மய்யமாகக் கொண்ட பல தற்காலிக வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக, அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் நகரத்துக்கு வருவதால், தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.