கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரம் நிலையில், தற்போது கொலைக்கான காரணத்ழதயும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.