அவ்வாறு வருவோரின் முழு குடும்பமும் தனிமைப்படுத்தப்படுவார்களெனவும் அவர் எச்சரித்துள்ளார்.இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “மஸ்கெலியாவில் இதுவரையில் 15 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மலையக மக்களில் சிலர் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் முதலாளிகளாகவும், தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர்.
இவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு வருவதற்கு முயற்சிக்ககூடும்.” எனவும் தெரிவித்தார்.
“எனவே கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அவர்கள் வருகைதருவதன்மூலம் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமல்ல அவர்கள் அவ்வாறு வந்தாலும் இங்கு சுயதனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிறிய வீடுகள் என்பதால் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.” எனவும் கூறியுள்ளார்.
இதனால் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே இம்முறை சுகாதார பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு
அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.