இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 3300 கோடி ரூபாய் செலவில் இந்திய அரச நிறுவனம் ஒன்று இந்த ஒப்பந்தத்தை ஏற்று அபிவிருத்திப் பணிகளை செய்ய உள்ளது. இதனால் அடுத்த ஐந்து மாதங்களுக்கு அநுராதபுரம் – ஓமந்தை வரையிலான ரயில் சேவைகள் முழுமையாக தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டம் என்கிற ரீதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் அநுராதபுரம் வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும். அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்குப் பயணிப்பவர்களுக்கு ஏற்றவகையில் அநுராதபுர ரயில் நிலையத்திலிருந்து தனியார், அரச பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.