இந்நிலையில், புதிய தொற்றுக்களைக் கண்டுபிடிக்க அரசியல் தலைவர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுதவிர, பிரித்தானியாவில் வேகமாகப் பரவிவரும் மேலும் தொற்றக்கூடிய கொவிட்-19 மாறியால் ஐ. அமெரிக்கர்கள் மேலும் அச்சமடைந்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து பயணத்தை தடை செய்வதற்கு ஐ. அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆறு நாள்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தொற்றுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 18 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், 325,000க்கும் அதிகமானோர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
புதிய அதிகரிப்பின் மய்யமான கலிபோர்னியாவில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு, வைத்தியர்கள், தாதியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
பல மாநிலங்கள், நகரங்கள் முடக்கங்கள், வியாபார மூடல்களை அறிவித்துள்ளன.