நிர்வாகம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தச் செய்திக்கு, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
“இலங்கை – சீன நாடுகளின் தலைவர்கள், எப்போதும் நெருக்கமான நட்புறவைப் பேணி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து நல்ல உறவைப் பேணுவதற்கே எதிர்பார்த்துள்ளோம். எனினும், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஸ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே நடைபெற்ற கருத்தரங்களில், இரு நாட்டு ஜனாதிபதிகளும் கலந்துகொள்ளவில்லை” என்று இது தொடர்பாக, தூதரகத்தின் உத்தியோகப்பபூர்வ டுவிட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.