ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் அறிவித்தலை விடுத்த பொலிஸார் தெரிவித்ததாவது,
“இது இலங்கை பொலிஸாரின் அறிவித்தல், பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் நாளை(இன்று) காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, எந்த ஒரு நபரும் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என இந்த உத்தரவின் மூலம் பணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்படுவது சட்டப்படி குற்றமாகும்“ என்று அறிவித்தனர்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம, திங்கட்கிழமையன்று (09) பிரதமரின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் மீண்டும் போராட்டக்காரர்கள் அங்கு கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.