யாழ் கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில், வியாழக்கிழமை (03) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டசியில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இக் கூட்டணியின் சின்னமாக குத்துவிக்கு இருந்த்து.
ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை ஒன்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.
அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.
இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.
இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்கட்டு இருந்த்து.
இதனடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் நேற்றையதினம் தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம். அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்மறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகிறோம் என்றார்.