கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மேன்முறையீட்டு வழக்குக்கான அழைப்பு கிடைத்த 11 பேரையும். இன்று (28), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி நீதிமன்றம் வரை சென்றிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரதேசத்தின் பாதுகாப்புக்கும் பொதுமக்களுக்கும் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 11 பேருக்கு அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.