சட்டவிரோத வாகன இறக்குமதி குறித்து சுங்கத் திணைக்களத்திடம் விசாரணை

சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சுங்கத் திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.