சட்டவிரோத வாகன இறக்குமதி குறித்து சுங்கத் திணைக்களத்திடம் விசாரணை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் 100 வீதமானவை சுங்கப் பிரிவினரால் பரிசோதிக்கப்படுவதில்லை எனவும், ஆபத்தான கொள்கலன்களே இங்கு பரிசோதிக்கப்படுவதாகவும், சோதனை செய்யப்படாத கொள்கலன் ஊடாகவே வாகனம் நாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொள்கலன்களை பரிசோதிக்கும் அதிகாரிகளின் போதாமையினால் சில சமயங்களில் வாகனங்கள் நாட்டிற்குள் கொண்டுவந்திருக்கக் கூடும் எனவும், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் பரிசோதிப்பதில்லை எனவும், இதனால் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் வருடமொன்றுக்கு 350 முதல் 400 பில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டும் திறன் சுங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.