“சந்தர்ப்பம் கிட்டட்டும்”

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், பொதுத் தேர்தல் ஜனநாயக மற்றும் அமைதி முறையான, மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்டட்டும் என  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வீழ்ச்சி கண்டு அதளபாதாலத்துக்குக்குள் இருக்கும் தேசத்தை, வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை இந்த பாதாளத்தில் இருந்து  மீட்க அனைவரும் கைகோர்த்து, நாட்டின் மீட்சிக்கு 220 இலட்சம் மக்களும் பங்களிக்குமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.