சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம், வவுனியா கந்தசுவாமி வீதியில் நேற்று முன்தினம் (28) திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தின் பெயர்ப்பலகையை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரனும் கட்சி அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமரனும் திறந்து வைத்தார்கள்.