இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்கு பிறகு, வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்குப் பொருந்தும் னஎத் தெரிவிக்கபட்டது.
இவ்விடயம் தொடர்பில் மீளாய்வு மற்றும் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் வரை, சுற்றறிக்கையை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.