முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அரசியல் என்கிற படகில் பயணித்து அவரையே தியாகம் செய்தவர் தேசிய தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம் அஷ்ரஃப் அவர்கள், இவருடைய அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், மனிதாபிமானம், சாணக்கியம் ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும் என இன்றைய தியாகத் திருநாளில் வாழ்த்துகின்றார் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் சட்டமாக இஸ்லாமிய சமய மார்க்கம் உள்ளது, ஈகை, தியாகம் ஆகிய உயரிய மனிதப் பண்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு அம்சங்களாக விளங்குகின்றன, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை இவற்றுக்கு முன்னுதாரணமாக உள்ளது, இதனால்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஈகைப் பெருநாளையும், தியாகத் திருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர், ஸ்ரீலங்கா முஸ்லிம்களை பொறுத்த வரை ஈகை, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அரசியல் வழிகாட்டி அஷ்ரப் அவர்கள் விளங்குகின்றார் என்று ஹஜ்ச் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள இவர் தேசிய தலைவர் அஷ்ரப் அவர்களின் ஈகை, தியாகம் ஆகியவற்றை அரசியல் தலைமை ஒருபோதும் மறக்கவோ, மரிக்கச் செய்யவோ கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.